தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அமர்க்கவுசிக் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் ராஜ்குமார், கபூர் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இந்த படத்திலும் நடிக்கின்றனர். இந்த படத்தில் புதிய பாடல் ஒன்றில் நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடுவதற்கு இவருக்கு ஒரு கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா என பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.