Home விளையாட்டுகிரிக்கெட் இந்தியா VS இலங்கை முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது ….!!!

இந்தியா VS இலங்கை முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது ….!!!

by dailytamilvision.com
0 comment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாடுகிறது .இதற்கு முன் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத்,  சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர். மேலும் சீனியர் வீரர்களான ரகானே, புஜாரா, விருத்திமான் சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இத்தொடரில் இருந்தது நீக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி  என்பதால் இத்தொடர் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்நிலையில் இத்தொடருக்காக  இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சில்  ஈடுபட்டு வருகின்றனர் . இப்போட்டி  நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது .

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.