82
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள இளைஞர் ஒருவர் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்ட பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவள் விரும்பியதெல்லாம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் கடைசியில் அந்த பில்லை கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானார். காரணம் அந்தப் பில் தொகை 44,829 ஆக இருந்தது.
அவர் கையில் பணமில்லாத நிலைமையில் அவர் நண்பரின் உதவியை கேட்டு பில் தொகையை செலுத்தினார். அதன் பின்பு பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் நண்பர் அந்த உணவக பில்லை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.