உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 3 ஆண்டுகள் தொடர்கிறது . இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அதன் நட்பு நாடாக இருந்து வருகிறது. சீனாவால் ரஷ்யா- உக்கிரன் இடையான போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டீமிட்ரோ குலோபா சீனாவுக்கு சென்றுள்ளார்.
இவர் சீன வெளியுறவு துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதில் உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து” சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்”. பின்பு “நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கி செல்வது எங்களுக்கு அவசியம் இதில் முக்கியமான பங்கு வைக்க முடியும்” என்று கூறியுள்ளார். ஒருமித்த கருத்தோடு இணைந்து அரசியல் நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தினருக்கு சீன உதவி செய்யும் என சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டின் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.