உத்திரபிரதேச மாநிலத்தில் ஹிமாயுபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ராம்நகரை சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்று திருமண நிகழ்வை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்துள்ளது அன்று இரவு விருந்தினர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டியுள்ளது .
ஆனால் விருந்தினர்கள் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கை கலப்பாகி ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்து உள்ளன. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களின் வைரலாகியுள்ளது .