125
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பஞ்சாயத்து தலைவர் டி கே பாண்டியன் தலைமை தாங்க துணைத்தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்க பள்ளி நிர்வாகி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றார்கள். இந்த முகாமில் பெல்லா கிளாடிஸ், கண் மருத்துவர் மேஷாக் பீட்டர் உள்ளிட்டோர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கினார்கள்.