கன்னி ராசி அன்பர்களே…! மனதளவில் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் கண்டிப்பாக மாறிவிடும்.
இஷ்ட தெய்வத்தின் அனுகூலத்தை கண்டிப்பாக பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளை எல்லாம் மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். அனுகூலமான சூழல் கண்டிப்பாக ஏற்படக்கூடும். நிலுவை பணம் கண்டிப்பாக வசூல் ஆகிவிடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நட்பு உங்களுக்கு கொஞ்சம் பகையாக கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த வேலை முடியாமல் போகலாம்.
தொழில் கூட்டாளிகளுடன் விழிப்புணர்வை காட்டுவது நல்லது. அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். மன திருப்தியுடன் எதிலும் ஈடுபட வேண்டி இருக்கும். காலையில் சீக்கிரமாக எழுந்து இருங்கள் பணிகளை சீக்கிரமாக முடியுங்கள்.
நம்பிக்கையை மட்டும் எதிலும் இழக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். பெண்கள் குடும்ப தகராறில் ஈடுபடும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடுவீர்கள். பிடித்தமான செயல்களை செய்து பாராட்டுக்கு உள்ளாவிர்கள். காதலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். காதல் கை கூடி திருமணத்தில் முடியும்.
மாணவர்கள் மனதிற்குள் ஏற்படக்கூடிய கவலைகளுக்கு மருந்து கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஐந்து.
அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.