கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அவர்களது உறவினரின் வீடுகளில் கடந்து சில நாட்களாக லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கான சொத்துகள் , ஆவணங்கள் பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 51 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து சேர்ப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.பெங்களூர் பகுதியில் பெங்களூர் ஊரகம் ,சிமோகா, யாதகிரி, தும்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது . இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் .மேலும் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளின் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது