68
காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்றும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்தாக கூறப்படுகிறது .