மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த இவர் தனியாக இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்தவர்கள் தியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தியா இத்தகைய முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.