கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திருநங்கையர் பாரதம் கற்று வருகின்றனர் . அதில் தயா காயத்ரி, கார்த்திகா ரதிஷ் , ஸ்ருதி சித்தாரா , ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார். சந்தியா அஜித், சங்கீதா இவர்களுக்கு பரதநாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. இதை எடுத்து அவர்கள் தனியார் அறக்கட்டையை முயற்சி மூலமாக பரதநாட்டியம் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி கொடுத்தார். இவர் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தில் மூலம் பிரபலமானவர் என கூறப்படுகிறது .
இவர்களது அரங்கேற்றம் அங்குள்ள சிவன் கோயிலில் நடைபெற்றது .இதற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அவர் பேசும் போது திருநங்கையர் ஒரு முக்கியமான பிரிவினர் என கூறியுள்ளார். திருநங்கையரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி கேரளாவில் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .