கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவி விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அவர் அரசு மருத்துவமனை டாக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது. இதை எடுத்து அவர் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரிடம் காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த இர்ஷானா என்று இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்து அவரை திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த கும்பல் டாக்டரிடம் பேசி இருக்கிறது. இதனால் டாக்டர் திருமணம் செய்ய சம்மதித்தார்.
இந்த நிலையில் இர்ஷனாவின் சகோதரர் என்று அறிமுகமான நபர் உள்ளிட்ட பல பேருடன் கோழிக்கோட்டின் இருவருக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான இருவரையும் குடியமர்த்த வீடு பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் டாக்டர் 5 லட்சம் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு டாக்டரே ஒரு மசூதி முன்பு நிறுத்திவிட்டு மணப்பெண் உள்ளிட்ட அனைவரும் மாயமாகி உள்ளனர். இவர்கள் செல்போன்,டேப்களை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தான் திருமண மோசடியில் ஈடுபட்டது டாக்டர் அறிந்தார். பின்பு போலீசாரிடம் புகார் கொடுத்த அவர் அந்த கும்பலை தேடி வந்தனர். அதில் இளம் பெண் இர்ஷானா போலீஸ் இடம் சிக்கினார். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.