65
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சிக்கிமில் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.