தமிழ் சினிமாவில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். இந்த படத்தின் மூலம் பெண் ரசிகர்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படம் ஹிட் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பிரியமான தோழி, ரன் , கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
சமீபத்தில் உடல் எடை கூடி காணப்பட்ட இவர் ஜிம் போகாமல் தனது உடல் எடை குறைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, மாலை 6.45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன் எனவும் அதிகாலை 90 நிமிடமும் தூங்குவதற்கு முன்னும் நடைப்பயிற்சி செய்வேன். மேலும் இயற்கையான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக் கொண்டு 21 நாட்களில் தான் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.