95
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இவர் பட வேலைகளுக்கு நடுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், இவர் பிரபல நடிகை ரம்பாவை அவரது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.