தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி உடன் புதிய படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களின் நடிப்பதை காட்டிலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் ஷூட்டிங் செல்வதற்கு முன்பாக தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் சில புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.