95
ஜப்பான் டோக்கியோவில் உள்ள மேற்கு ஓகசவாரா தீவுகளுக்கு அருகாமையில் 530 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் கடந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.