65
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்த நிலையில் 14 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது . மேலும் ஒன்பது பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.