கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் தோப்பு வணிகர் தெருவில் சதீஷ்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த தேவி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.இந்நிலையில் காவல் நிலையம் முன்பு சதீஷ் தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற பெண் போலீஸ் ரோஸ்லின் ஜெபராணியை சதீஷ் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். மேலும் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து சதீஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர்.
மனைவியை தாக்கிய வாலிபர்…. பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்…. அதிரடி நடவடிக்கை…!!
97