Home செய்திகள் ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது….எந்த பாதிப்பும் இல்லை…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது….எந்த பாதிப்பும் இல்லை…!!

by Sathya Deva
0 comment

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயிலானது ஆழ்வார் ரயில் நிலையத்திலிருந்து ரேவாரி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது மதுரா அருகே காலை 2.30 மணிக்கு தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பெட்டிகள் பாதிப்படைந்துள்ளன. இதை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் ஆழ்வார்- மதுரா வழித்தடங்கள் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக உத்திர பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் சரக்கு ரயில் உள்ள 7 பெட்டிகள் தரம் புரண்டு விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் கடந்த 18 தேதி கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர் -திப்ருகர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு அதில் 3 பேர் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.