வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,300 பேர் தங்கி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் வயநாடு நிகழ்ச்சிகளில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடந்து வருகிறது.
நிலசரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.மேலும் பெரிய பாறைகள் விழுந்ததாலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் உடல்கள் சிதைந்த நிலையிலே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது.