மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று திடீர் வாயு கசிவு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது . இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..
விமான நிலையத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த தொட்டியில் இருந்து தான் இந்த வாயு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத அந்த தொட்டியை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த வாயு கசிவினால் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தான் பாதிக்கப்பட்டதாகவும் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.