Home செய்திகள்உலக செய்திகள் வினேஷ் போகத் விவகாரம்… ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு….!!!

வினேஷ் போகத் விவகாரம்… ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு….!!!

by Sathya Deva
0 comment

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட-ஐ எதிர்கொள்ள இருந்தார். இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார். இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளர்.

இவர் தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.