73
தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்ரமன் 1990 ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகனார். இதனை தொடர்ந்து சூர்யவம்சம், உன்னை நினைத்து, பூவே உனக்காக, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். கடைசியாக இவர் நினைத்தது யாரோ என்கின்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில், இவர் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும் இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் எனவும் கூறியுள்ளார்.