தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், ஆதியின் ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ”கடைசி உலகப் போர்” என்ற படத்தில் இவர் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.