செய்திகள் மாநில செய்திகள் அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு…. மத்திய மந்திரிகள் ஆதரவு….!! Sathya Deva18 July 20240131 views அக்னிபாத் திட்டம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும் அதில் 25 சதவீதம் பெயரை மட்டும் 15 ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்வதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியவர் அக்னி நாள் பணிக்காலத்தின் போது உயிரிழந்தால் இழப்பீடாக 1 கோடி வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் கீழ் பணி புரியும் வீரர்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் கான்ஸ்டபிள், சுரங்க காவலர் ,வன காவலர் ,ஜெயில் வாடர், எஸ் . பி .ஓ போன்ற பதவிக்காக நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீதம் இவர்களுக்கு ஒதுக்கப்படும் என அரியானா முதல் மந்திரி நயாப்சிங் சைனி தெரிவித்துள்ளார் . ஆனால் ஏற்கனவே இந்த வீரர்களுக்கு ஆயுத போலீஸ் படை கான்ஸ்டபிள் வேலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.