அசாம் மாநிலத்தில் 78வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ ஷர்மா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்பு அவர் மக்களுக்கு தனது உரையை கூறிய பின் நிகழ்ச்சி முடிந்தது. அதன் பின் சில நிமிடங்களில் உல்பா அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டம் தீட்டி இருப்பதை கூறியிருந்தது. ஆனால் சிலர் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்ட குண்டுகள் வெடிக்க வில்லை என உல்பா அமைப்பின தெரிவித்தனர்.
மேலும் அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது. ஆனால் மீதமுள்ள ஐந்து இடங்களை சுட்டிக்காட்டவில்லை என கூறப்படுகிறது. இதை எடுத்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதலில் 24 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளில் 8 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டுகள் அசாமில் அமைச்சர்கள் இல்லத்தின் அருகில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இந்த வெடிகுண்டுகள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக வெடிக்காததால் பெரும் நாசு வேலை தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.