வாட்ஸ்அப் நிறுவனமானது பயனாளர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் விதமாக அடுத்தடுத்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, வீடியோ கால் வாயிலாக ஸ்க்ரீன் ஷேர் செய்வது, HD வீடியோக்களை பயனாளர்களுக்கு பகிர்வது, Avatar வடிவிலான ஸ்டிக்கர்களை தாமாகவே வடிவமைத்து பகிர்வது, தெரியாத நபர்களிடமிருந்து வரும் காலை Mute செய்வது, ஒரே சமயத்தில் 35 பேர் வரைக்கும் வாட்ஸ்அப் காலில் பேசுவது உட்பட பல்வேறு அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக Email வாயிலாக அக்கௌன்ட்டை லாகின் செய்வது என பல பாதுகாப்பு தொடர்பான அப்டேட்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 24ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியானது இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் whatsappல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் ஆண்ட்ராய்டு 4.1 உள்ளிட்ட சாதனங்களில் அத்தைய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் வாட்ஸ்அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.