சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபலமா? அவரே கூறிய தகவல்…!!! Sowmiya Balu14 July 2024075 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். டாப்ஸி கதாநாயகியாக நடித்திருந்த அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்தில் கிஷோர், நரேந்திரன், ஜெயபாலன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜெயபாலன் பேட்டைக்காரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் பார்த்திபன் தான் நடிக்க இருந்தாராம். இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.