சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! ”இந்தியன் 2” படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளியான புதிய அப்டேட்…!!! Sowmiya Balu3 August 20240113 views நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படம் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை OTT யில் வெளியிட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி இந்த திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகு OTT ரிலீஸ் முடிவாகியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி இந்த படம் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது.