Home சினிமா செய்திகள் அடடே! சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்… இயக்குனர் யார் தெரியுமா?

அடடே! சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்… இயக்குனர் யார் தெரியுமா?

by Sowmiya Balu
0 comment

தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாகவும் ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.