சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! சூப்பர்! “தளபதி 69” படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu22 August 2024076 views தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் கடைசி படம் ”தளபதி 69” என கூறப்பட்டு வருகிறது. இவர் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ள காரணத்தினால் இவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கப் போகிறார். இந்நிலையில், தளபதி 69 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 4ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை அல்லது ஹைதராபாத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.