சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! தெலுங்கில் ரீ ரீலீஸ் செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!! Sowmiya Balu11 August 2024094 views விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமரராஜா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூப்பர் டீலக்ஸ்”. இந்தத் திரைப்படம் கடந்த 9ம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்கில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழிலும் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.