சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா அடடே! நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி…? வெளியான அசத்தல் அப்டேட்…!!! Inza Dev10 July 2024068 views இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் ”நேசிப்பாயா”என்ற படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியுடன் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.