108
தமிழ் சினிமாவில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ”மகாராஜா”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இவர் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, இவர் அடுத்ததாக நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறி இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.