சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! “மகாராஜா” பட இயக்குனரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்… என்ன சொன்னாருன்னு பாருங்க…!!! Sowmiya Balu2 August 20240152 views தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் மகாராஜா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. இந்நிலையில், 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் நித்திலனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனை இயக்குனர் நித்திலன் தனது எக்ஸ் தளத்தில் உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவு ஆகியற்றை பார்த்து வியந்துவிட்டேன். மேலும், உங்களுக்கு மகாராஜா படம் எந்த அளவு பிடித்துள்ளது என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் கூறி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.