அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட் போன்…. வெளியீடு எப்போது தெரியுமா…?

பிரபல சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனின் டீசர் வெளியான நிலையில், வெளியீடு குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீடு தேதி குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது. அதன்படி அக்டோபர் 4-ஆம் தேதி இந்த போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்களும் வெளியாக இருக்கிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் அடுத்த வாரத்தில் samsung நிறுவனத்தின் புதிய சாதனங்கள் வெளியாகும். மேலும் samsung galaxy S23 FE ஸ்மார்ட் போனில் 6.4 inch AMOLED display, FHD+120Hz Refresh rate உள்ளது. அதன் பிறகு இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 10 மெகா பிக்சல் செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல அம்சங்கள் உள்ளது.

Related posts

35 ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட்ஆகாது… புது அப்டேட்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!

BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!

உலக வரலாற்றில் முதல்முறையாக…. ஸ்மார்ட்ஃபோனுக்கு இத்தன வருஷம் warranty-யா…?