அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு… மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்….!!

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 487 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது . இது குறித்து சுகாதாரத் துறை அளித்த தகவல் படி இந்த ஆண்டுடில் மட்டும் 10,449 பேர் பாதிக்க பட்டதாகவும் மேலும் 358 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் 8 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர் .

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் “டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இனிவரும் காலங்களில் பருவமழை தொடங்குவதால் டெங்கு பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!