அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் ரவுடிகளா…? நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய பா. ரஞ்சித்…!!

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு மறைமுக சூழ்ச்சிகளில் உள்ளன அதனை காவல்துறையினர் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் அதுவரை ஓயமாட்டோம். தலித் மக்கள் எங்களுடைய உரிமைகளை கேட்டால் எங்களை பி.டீம் என கூறுகின்றனர். நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.

சமூகத்தை சரி செய்ய அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று கூறுவீர்களா? அப்படி என்றால் நாங்களும் ரவுடிகள் தான், அறவழியில் போராடி கொண்டிருக்கிறோம் எங்களை காய படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார். மேலும் தலித் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் எத்தனை நாட்களாக அடிமையாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் குரல் கொடுத்த நான் ஏன் இங்கு வந்து பேசப் போகிறேன் எனவும் உணர்ச்சி போங்க பேசியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!