அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்… புதிதாக களமிறங்கிய கமலா ஹர்ரிஸ்….!!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வெற்றியாளராக அதிபர் ஜோப் பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹர்ரிஷ் களம் காண்கின்றார்கள். மேலும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார். ஜோ பைடனுக்கு துவக்கம் நாளில் இருந்து அமோகமான வரவேற்பு கிடைக்கவில்லை மேலும் அவரது உடல் நிலையும் அவருக்கு எதிராக இருந்தது. இவரின் நேரடி வாதத்தில் இந்த விஷயம் பொது வெளியில் அம்பலமானது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹர்ரிஸ் அவர்களை ஜோ பைடன் தெரிவித்தார். அவர் தனது இணையதள பதிவில் “ஜனநாயக கட்சினரே எனது வேட்பு மனுவை ஏற்க வேண்டாம் எனவும் எஞ்சிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹர்ரிஸ்க்கு என் முழு ஆதரவு ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயக வாதிகள் ஒன்று கூடி ட்ரம்ப்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது இதை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!