கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்தது குறித்து அ.தி.மு.க சார்பில் பல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கவர்னரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சட்டசபையில் கூட்ட தொடர் தொடங்கியபோது கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்தது அவை தலைவர் அப்பாவு எடுத்துக்கூறியும் அவர்கள் கேட்காததால் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை நடப்பு கூட்ட தொடர் முழுவதிலும் கலந்து கொள்ள கூடாது என சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அ.தி.மு.க வினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.