“அந்த முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க ஆசை”… மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருப்பவர். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு ரிலீசான கீதாஞ்சலி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் .

பிறகு இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சாமி 2, அண்ணாத்த, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15 நாளை வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்து கொண்டுள்ள இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், ”பிரபல நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க எனக்கு ஆசை எனவும், அவ்வப்போது கதை எழுதுவேன்” எனவும் கூறியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?