Home செய்திகள்உலக செய்திகள் அனில் அம்பானி பங்குச்சந்தை…வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை….!!!

அனில் அம்பானி பங்குச்சந்தை…வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை….!!!

by Sathya Deva
0 comment

பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது. நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது. அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.

அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது. அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துயுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.