அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல் எனப் பெயரிட்டுள்ளார். அம்பானி நிறுவனம் மலிவான விலையில் வீடு கட்டிக் கொடுப்பதுதான் இலக்கு என அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 308 இல் இருந்து தற்போது 225.85 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அம்பானி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் பிரதம மந்திரி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை குறிவைத்து இந்த திட்டம் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் கடந்த 12-ந்தேதி ரிலையன்ஸ் ஜெய் பிராப்பர்ட்டிஸ் தனியார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்ததைக்கு விடுதல் போன்ற இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.