உலக செய்திகள் செய்திகள் அபுதாபியில்…. வீட்டை அருங்காட்சியமாக மாற்றிய நபர்…!! Sathya Deva26 July 2024047 views அபுதாபியில் வசிக்கும் அமீரகத்தை சேர்ந்த ராஷித் யூசிப் அல் ஹம்மாதி தனது வீட்டையே அருங்காட்சியமாக மாற்று உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அபுதாபியின் அல் பலா பகுதியில் உள்ள எனது வீட்டில் பாரம்பரிய பொருட்களை சேகரித்து அருங்காட்சியமாக மாற்றி உள்ளதாகவும் எனது இந்த அருங்காட்சியத்திற்கு மறைந்த அமீரகத்தின் நிறுவன அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனது தந்தை ஷேக் ஜாயித் கூறிய பல்வேறு கருத்துக்கள் குறித்து அடிக்கடி நினைவு கூர்வார் என்று கூறியுள்ளார். அந்த அருங்காட்சியத்தில் 1923 ஆம் ஆண்டை சேர்ந்த கார், 17 வருடம் பழமையான கார்கள், நூறு ஆண்டு பழமையான புத்தகம், பாஸ்போர்ட், தொலைக்காட்சி, வாசனை திரவிய வகைகள், பாரம்பரிய வீடுகளின் டிசைன்கள் என்று பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை சேகரித்து வருவதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.