அமுல் மோர் கப்பில் புழு…. வைரலாகும் வீடியோ…வருத்தம் கூறிய நிறுவனர்…!!!

அமுல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு மோர் கப்பின் புழு நிறைந்த வீடியோவை கஜேந்திரன் யாதவ் என்பவர் அவர் இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில் அமுல் இணையதளத்தில் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள் என்றும் அமல் உங்களின் அதிக புரதச்சத்து நிறைந்த மோருடன் புழுவையும் சேர்த்து அனுப்பி விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அண்மையில் நான் வாங்கிய மோர் கப்பில் புழு இருப்பதை கண்டு மிகவும் வருந்துகிறேன் என்றும் இந்த தவறை வெளிப்படுத்தவே இதில் பதிவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.https://twitter.com/imYadav31/status/1813450392115478759?ref

மேலும் அவரின் அடுத்த பதிவில் நான் அமுல் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். அத்துடன் அனைத்து ஆதாரங்களையும் இணைத்து அவர்களின் சோதனைக்காக இன்றுக்குள் சேகரிக்கும் படி கேட்டுக் கொண்டேன். நான் எந்த ஒரு பொய்யான கருத்தை சொல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமுல் தலைமை அலுவலர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தார் என கஜேந்திரன் யாதவ் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!