உலக செய்திகள் செய்திகள் அமெரிக்காவில் டென்னிஸ் தொடர்….இந்தியா வீரர் தோல்வி…!!! Sathya Deva13 August 20240152 views அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கின்ஸ் மெக்டொனால்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மெக்டொனால்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.