உலக செய்திகள் செய்திகள் அமெரிக்காவில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு… 44.6 மில்லியனுக்கு ஏலம்…!! Sathya Deva18 July 20240126 views அமெரிக்காவில் கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதை வடிவத்தை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தர். இந்த டைனோசருக்கு “அபெக்ஸ் “என பெயரிடப்பட்டது. இந்த டைனோசர் 11 அடி உயரமும் மூக்கில் இருந்து வால் வரை 27 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் என்ற நிறுவனத்தில் மூலம் ஏலம் விடப்பட்டது. இதன் எலும்புக்கூடு 44.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு( அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 372 கோடி )ஏலம் போனதாக கூறியுள்ளார். இது மற்ற டைனோசரின் எலுப்பை விட 11 சதவீதம் அதிகமாக ஏலம் போனதாவும் , மதிப்பு மிக்கதாக இருக்கிறது என கூறியுள்ளார் . மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டீகோசொரஸ் வகை டைனோசரின் புதை வடிவம் என்று கூறியுள்ளார்.