அமெரிக்கா அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டெனால்டு ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். இதனால் அவருக்கு எதிராக பலர் போர்க்கொடிகளை தூக்கினர். இதை அடுத்து ஜோ பைடன் அவர்கள் விலகினார்.
அவருக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வி அடைந்தால் கமலா ஹரிசுக்கு அதிகாரம் மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்கா அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோபேடன் பேட்டியளித்தார். அப்போது அவர் ட்ரம்ப் கூறியதில் அர்த்தமுள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை ரத்த களறியாக்குவோம் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடவுள்ள முன்னாள் அதிபர் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்த களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது