உலக செய்திகள் செய்திகள் அமெரிக்கா அறக்கட்டளைஉருவாக்கிய.. பார்பி பொம்மைகள்…!!! Sathya Deva25 July 2024097 views பார்பி பொம்மைகள் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உலக அளவில் மிக பிரபலமாக இருந்து வருகிறது. இந்த பொம்மைகளை மையமாக கொண்டு வெளியான திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது என கூறப்படுகிறது. உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் ஆனால் சில விமர்சனங்களை கொண்டு வருகிறது என கூறப்படுகிறது. வெள்ளை நிறம் கட்சி தனமான உடல் அமைப்பு போன்றவை தான் அழகானவை என்ற தவறான தோற்றத்தை பார்பி உருவாக்குவதாக பலர் விமர்சித்து உள்ளனர். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை கடைபிடிக்கும் வகையில் பார்வையற்ற மாற்று திறன் கொண்ட பார்பி பொம்மைகளையும் உடல் நல குறைபாடு உடைய பொம்மைகளையும் அமெரிக்காவில் மெட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை மற்றும் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி உடன இணைந்து இந்த பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.